We will no longer be supporting IE7 and below as a web browser effective June 1st 2020. Click here for more information.

Sign In
Skip Navigation LinksWelcome-to-Simcoe-County-Tamil சிம்கோ மாவட்டத்துக்கு வாருங்கள்!
Skip Navigation LinksImmigration Simcoe > சிம்கோ மாவட்டத்துக்கு வாருங்கள்!

சிம்கோ மாவட்டத்துக்கு வாருங்கள்!

​​பரந்த அளவிலான நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சமூகங்களைக் கொண்டதும் பல்வேறுபட்ட நிலவியல் பிரதேசங்கள் உள்ளதுமான சிம்கோ மாவட்டம்  ரொறன்ரோ, ஒன்ராறியோவின் வடக்கில் ஒரு மணி நேரத்துக்குக் குறைவான பயணதூரத்தில் அமைந்துள்ளது.  
சிம்கோ மாவட்டத்தில் 450,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள், அத்துடன் ஏனைய கலாசாரங்களிலிருந்து மக்களைத் தொடர்ந்தும் நாங்கள் இந்தப் பகுதிக்கு வரவேற்பதால் இந்தச் சனத்தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிம்கோ மாவட்டத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்துக்குமான பல வாய்ப்புக்களை நீங்கள் பார்ப்பீர்கள்; வேலைக்காக குடியேறுவதற்கும், ஒரு குடும்பமாக வாழ்வதற்கும் ஒரு சிறந்த இடமாக இது உள்ளது .
இந்தச் சமூகத்திற்குப் புதிய அல்லது சிம்கோ மாவட்டத்தைத் தமது வீடாக மாற்ற நினைக்கும் மக்களுக்கான ஒரு உள்ளூர்த் தகவல் ஆதாரமாக சிம்கோ மாவட்டத்தின் குடிவரவு  வலைவாசல் (Immigration Portal) உள்ளது. உங்களுடைய இடமாற்றத்துக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்கள், சேவைகள் மற்றும் எங்களுடைய சமூகத்தில் உள்ள முகவர்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த இணையதளம் வழங்குகிறது.
இங்குள்ள தகவல்கள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. ஆங்கிலம், இந்த மாவட்டத்தின்  பிரதானமான மொழியாக இருந்தாலும், பல்வேறு கலாசாரங்களுக்கும், மொழிகளுக்கும் வீடாக எங்களுடைய சமூகங்கள் இருக்கின்றன. சில திட்டங்களினதும் சேவைகளினதும் தகவல்களை விளங்கப்படுத்த அல்லது மொழிபெயர்க்க உதவி செய்யக்கூடிய வளங்கள் உள்ளன.
சிம்கோ மாவட்டம் பற்றிய தகவல்களை உங்களுடைய மொழியில் கோர இங்கே அழுத்துங்கள்
இந்த சமூகத்துடன் ஒருங்கிணைய உதவும் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் முகவர்கள்  சிம்கோ மாவட்டத்தில்  உள்ளனர். Settlement Services agencies போன்ற அமைப்புக்கள் ஆங்கில மொழி வகுப்புக்களை வழங்குவதுடன் சிம்கோ மாவட்டத்தில் வாழ்வது மற்றும் வேலை செய்வது பற்றிய தகவல்களையும், ஏனைய உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைப்புக்களையும்  வழங்கலாம்.

குடியிருப்புச் சேவைகள் ஆங்கில மொழிப் பயிற்சி

பிராட்போர்ட் குடிவரவு மற்றும் சமூக சேவைகள்

Bradford Immigrant and Community Services (BICS)

*​*​

YMCA ன் புதியவருக்கான சேவைகள்

YMCA Newcomer Services

*​*​

வரவேற்பு மையத்தின் நடமாடும் சேவைகள்

Welcome Centre Mobile Services

*​*​

கற்றல் மையம், சிம்கோ மாவட்டப் பாடசாலைச் சபை

The Learning Centre, Simcoe County District School Board

*​

யோர்ஜியன் கல்லூரியின் குறிப்பிட்ட மொழித் தொழிற் பயிற்சி

Georgian College Occupational Specific Language Training

*​

 
 
சிம்கோ மாவட்ட குடிவரவு வலைவாசலை (Immigration Portal)  ஆராய்வதன் மூலமாக சிம்கோ மாவட்டத்தில் வாழ்தல், வேலைசெய்தல், கற்றல் மற்றும் வர்த்தகம் செய்தல் பற்றி மேலும் அறியுங்கள். உங்களுக்கு வேண்டிய தகவல்களை உங்களால் கண்டறிய முடியாவிட்டால் அல்லது உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால் Simcoe County Local Immigration Partnership ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
சிம்கோ மாவட்டத்தின் ஒத்துழைப்புடன்  உருவாக்கப்பட்ட சிம்கோ மாவட்டக் குடிவரவு வலைவாசலுக்கு (Simcoe County Immigration Portal} கனடா அரசின் உதவியுடன்  ஒன்ராறியோ அரசு  உதவியளிக்கின்றது.  அத்துடன்  Simcoe County Local Immigration Partnership ஆல் இது பராமரிக்கப்படுகின்றது.